நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலா தம்பதியரின் இளையமகன் அகில் அக்கினேனி, ஜைனப் ரவ்ட்ஜியுடன் இன்று வகாலை ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் இல்லத்தில் மிக எளிமையாக திருமணம்செய்துள்ளார். இந்த திருமண விழாவில் இருவரது குடும்ப உறுப்பினர்களும் நெருங்கிய நண்பர்களும் மற்றும் சில உறவினர்களும் மட்டுமே பங்கேற்றனர்.

நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா, அவரது மனைவியான நடிகை சோபி துலிபலா, மேலும் நடிகர் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா மற்றும் அவர்களின் மகன் ராம் சரண் உள்ளிட்டோர், இந்த விசேஷ நிகழ்வுக்காக விடியற்காலையிலேயே நாகார்ஜுனாவின் இல்லத்துக்குச் சென்றனர்.
இந்த திருமண நிகழ்வுக்கு அடுத்ததாக வரும் ஞாயிறு, ஜூன் 8ஆம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனா குடும்பத்தினருக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.