நடிகர் ரவி மோகன் இன்று தனது தயாரிப்பு நிறுவனம் ‛ரவிமோகன் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரில் தொடங்கியுள்ளார். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் ரவிமோகனை வாழ்த்தியதுடன், அவருடனான தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்தில் நானும் ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன். அவர் சம்மதித்தால் இப்போதே முன்பணம் வாங்கிக்கொள்வேன்.
இப்போது ரவி மோகன் தயாரிப்பாளராக மட்டுமல்ல, இயக்குநராகவும் ஆகிவிட்டார். நடிகர் கார்த்திக்கும் அந்த ஆசை இருப்பதை நான் அறிந்திருக்கிறேன். அடுத்த தலைமுறையைச் சேர்ந்த நடிகர் மணிகண்டனும் இயக்குநராக வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகிறார். அவர் அதற்குத் தேவையான முழுத் தகுதியும் பெற்றவர்” எனக் கூறினார்.