கவின் நடிப்பில் விகர்னன் அசோக் இயக்கியுள்ள ‘மாஸ்க்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் நெல்சன் திலீப் குமார், நடிகர் கவினைப் பற்றி மனதாரப் பாராட்டி பேசினார்.

படம் குறித்து அவர் கூறுகையில், “பொதுவாக வெற்றிமாறன் சார் தயாரிக்கும் படங்கள் சமூக ரீதியானதாக இருக்கும். ஆனால் இந்தப் படம் சமூக கருத்துக்களுடன் கூடிய என்டர்டெயின்மென்ட் நிறைந்த ஒன்றாக இருந்தது. முதலில் இந்தக் கதையை கேட்டபோது, கவினின் கதாப்பாத்திரம் சற்றே ‘கிரே’ தன்மையுடன் இருந்தது. ஆனால் வெற்றிமாறன் சார் அதனை சரிசெய்து சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். மூன்றாவது முறை கதை கேட்கும்போது மிகவும் நன்றாக இருந்தது. இந்தப் படம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்,” என்றார்.
அதேபோல், கவின் பற்றி நெல்சன் கூறுகையில், “கவின் மிகவும் துணிச்சலாக எக்ஸ்பெரிமென்டல் படங்களில் நடிக்கிறார். அடிவாங்கினாலும் அஞ்சாமல் முயற்சி செய்கிறார். அவரின் முயற்சிகளில் பல காயங்கள் இருந்தாலும், அது அவரின் வளர்ச்சியின் அடையாளம். இப்போது அவருக்கு ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் மிக நிலையான இடத்தைப் பெறுவார் என்று நம்புகிறேன். ஒவ்வொரு படத்திலும் அவர் காட்டும் நடிப்பும் மெச்சுரிட்டியும் சிறப்பாகவே இருக்கிறது,” என்றார்.

