Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

அதர்வாவின் டி.என்.ஏ படத்தின் டீஸரை வெளியிடும் நடிகர் தனுஷ்! #DNA

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில், பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடம் சிறப்பான இடம் பிடித்த நடிகர் அதர்வா, தற்போது சுதா கொங்கரா இயக்கும் ‘எஸ்கே 25’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில், அதர்வா ‘டிஎன்ஏ’ எனும் படத்தில் நடித்துள்ளார். இதில் அதர்வா இரட்டை வேடங்களில் நடிக்கின்றார். அவருக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கியுள்ளார், மற்றும் இதை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ‘டிஎன்ஏ’ படம் முழுவதும் ஆக்சன் திரில்லர் வகையில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்து, டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், ‘டிஎன்ஏ’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி, டீசர் நாளை (10-ம் தேதி) மதியம் 12.05 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News