இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் பராசக்தி. இதில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இத்திரைப்படம், இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜனவரி 14ஆம் தேதி பராசக்தி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் ரவி மோகன் மற்றும் நடிகை ஸ்ரீலீலா தொடங்கியுள்ளனர்.
அதேவேளை, பராசக்தி படத்திற்கான டப்பிங் பணிகளை தற்போது நடிகர் அதர்வாவும் தொடங்கி உள்ளார். இதுகுறித்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

