மனோ கிரியேஷன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஏ. ராஜா தயாரிப்பில், ஆரி அர்ஜூனன், தீப்ஷிகா, பவித்ரா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து, படத்தின் தலைப்பை படக்குழுவினர், நாயகன் ஆரி அர்ஜூனனின் பிறந்தநாளான பிப்ரவரி 12ம் தேதி வெளியிட்டனர். இந்தப் படத்திற்கு ‘4த் புளோர்’ (நான்காவது மாடி) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158501.jpg)
இந்தப் படத்தை சுந்தரபாண்டி எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை லக்ஷ்மன் மேற்கொண்டுள்ளார். இசையமைப்பை தரண்குமார் செய்துள்ளார்.ஆரியின் பிறந்த நாளை பூந்தமல்லியில் அமைந்துள்ள பார்வைத்திறன் குறைவுடையோர் பள்ளியில் கேக் வெட்டி, விருந்து வழங்கி கொண்டாடப்பட்டது. பிறகு, பார்வைத்திறன் குறைந்த வயதானவர்களும், மாணவர்களும் முன்னிலையில், ஆரி அர்ஜூனன் படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158527.png)
தற்போது, ஆரி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அவர் நடித்துள்ள ‘அலேகா, டிஎன் 43, மான்’ போன்ற படங்கள் இன்னும் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றன. இந்நிலையில், அவர் தற்போது ‘4த் புளோர்’ படத்தில் நடித்து, தனது கதாபாத்திரப் பணிகளை முழுமையாக முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.