Monday, December 16, 2024

மோகன்லாலின் புதிய படத்தை இயக்கும் ஆவேசம் பட இயக்குனர் ஜித்து மாதவன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள திரையுலகில் சமீப காலமாக சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் 50 கோடி, 100 கோடி வசூலித்து பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றுள்ளன. இதனால், அந்த படங்களை இயக்கிய இயக்குநர்களுக்கு உடனடியாக பெரும் புகழ் கிடைப்பதுடன், அந்த வெற்றியே அவர்களுக்கு அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன் வேலை செய்யும் வாய்ப்பையும் தானாகவே பெற்றுத் தருகிறது. இதற்குச் சிறந்த உதாரணம், “ரோமாஞ்சம்” எனும் ஹாரர் காமெடி படத்தை இயக்கிய ஜித்து மாதவன். அறிமுகமில்லாத நடிகர்களுடன் இப்படத்தை உருவாக்கி, அதை 100 கோடி வசூல் கிளப்பில் இணைத்தார்.

அந்த வெற்றியின் பயனாக, அவரின் இரண்டாவது படமாக பஹத் பாசிலை வைத்து “ஆவேசம்” எனும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றிப்படமாக மாற்றியதோடு, தென்னிந்திய அளவில் அந்த படத்தைப் பற்றி அனைவரும் பேசும் அளவுக்கு கொண்டு சென்றார். இதனால் “ஆவேசம்” படத்தின் வெற்றி, ஜித்து மாதவனுக்கு அடுத்ததாக மோகன்லாலுடன் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பையும் தானாகவே பெற்றுத்தந்துள்ளது. இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான கோகுலம் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கவிருக்கிறது

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள “தொடரும்” எனும் மோகன்லாலின் 360 படம் தற்போது படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இந்த படத்தை இயக்கியவர் தருண் மூர்த்தி, முன்னதாக “ஆபரேஷன் ஜாவா” எனும் வெற்றி பெற்ற படத்தை இயக்கியிருந்தார். அந்த படத்திலும் சிறிய நடிகர்களே நடித்திருந்தார்கள். அந்த வெற்றிதான் மோகன்லாலின் படத்தை அடுத்ததாக இயக்கும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத்தந்தது.இந்த இரண்டு இயக்குநர்களின் வெற்றிகள் நமக்கு உணர்த்துவது, புதிய இயக்குநர்கள் தங்களின் முதல் படத்தில் திறமையை நிரூபித்தால், அதற்கடுத்தது மிகப்பெரிய வாய்ப்புகள் அவர்களுக்கு எளிதாக கிடைக்கும் என்பதே.

- Advertisement -

Read more

Local News