Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நடிகர் விக்ரம்-ஐ வைத்து நான் எழுதிய கதை… சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்துக்கு வாழ்த்து செய்தியுடன் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த இயக்குனர் வசந்தபாலன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் பராசக்தி படத்தின் முன்னோட்டம் குறித்து வசந்தபாலன் வெளியிட்ட வாழ்த்து பதிவில், தான் முதல் படத்திற்காக எழுதிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்ட கதையை நினைவுகூர்ந்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

என் முதல் திரைப்படமாக பல்வேறு கதைகளை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது இந்தி எதிர்ப்புப் போராட்ட பின்னணியில் ஒரு கதை எழுதலாமே என்று ஒரு வருடம் அந்த ஆராய்ச்சியில் நூலகங்கள் ஏறி இறங்கி வரலாற்றைப் படித்து அந்தக் கதையை எழுதினேன். நடிகர் விக்ரம் அவர்களுக்கு கதையை விவரித்தேன். அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. `அமர்க்களம்’ திரைப்படத்தைத் தயாரித்த வெங்கடேஸ்வராலயம் அந்த திரைப்படத்தைத் தயாரிப்பதாக இருந்து முன்பணம்கூட பெற்றுக் கொண்டேன்.பல்வேறு புறக்காரணங்களால் அந்த திரைப்படம் மேற்கொண்டு நகர, நகர்த்த இயலவில்லை.

அண்ணா கடிதங்கள் தொடங்கி, திராவிட இயக்க வரலாறு, இந்தி எதிர்ப்புப் போராட்டம் சம்மந்தமாக பல்வேறு புத்தகங்களைப் படித்தவாறு இருந்தேன். இரண்டு ஆண்டுகள் வெவ்வேறு கதாநாயகர்கள் வெவ்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் என பயணம் தொடர்ந்தது ஆனால் தேர் நகரவில்லை.அது என் கனவு மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பல்வேறு கலைஞர்களின் கனவாக இருந்திருக்கும்.

இன்று சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டக் காட்சிகளைக் காணும் போது மகிழ்ச்சியாக இருந்தது.முத்தமிழறிஞர் கலைஞரின் எழுச்சியான தலைப்பு.நடிகர் திலகத்தின் முதல் திரைப்படம் பல வெற்றி வரலாறு கொண்ட தலைப்பு.தமிழகம் முழுக்க கொழுந்து விட்டெரிந்த இன்றும் கொழுந்து விட்டெரியும் தலைப்பு `பராசக்தி’.இயக்குநர் சுதா கொங்கராவிற்கும் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். பெருஞ்சேனை ஒன்று திரளட்டும் என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News