ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் “காதலிக்க நேரமில்லை”. இந்தப் படத்திற்கு உலகப்புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
இந்தப் படத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனனுக்கு இணையாக யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்தின் படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் கவனிக்கிறார்.


இந்த சூழலில், காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடலான “என்னை இழுக்குதடி” வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரகுமான் மற்றும் தீ இணைந்து பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.