பிரபல மலையாள நடிகையும் இயக்குனருமான ஷாலின் ஜோயா, தமிழில் ‘கண்ணகி’ படத்தில் நடித்ததுடன், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் புகழ் பெற்றவர். மலையாளத்தில் இவர் இயக்கிய ‘தி பேமிலி ஆக்ட்’ திரைப்படம் கவனத்தை ஈர்த்த நிலையில்,இப்போது தமிழில் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது.

இந்த படம் கிராமத்து பின்னணியில், 1990களில் நடைபெறும் நகைச்சுவை–பேண்டஸி கதையாக உருவாகிறது. இப்படத்தில் நக்கலைட்ஸ் புகழ் அருண், பிரிகிடா முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். அவர்களுடன் எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், இளவரசு, ஜாவா சுந்தரேசன்,
ஜென்சன் திவாகர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இதுவரை பார்த்திராத விதமான முக்கிய வேடத்தில் தேவதர்ஷினி, அத்துடன் கவுரவ வேடத்தில் அஷ்வின் காக்குமனு நடிக்கின்றனர். இப்படத்தை ஆர். கே. இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. படம் குறித்து ஷாலின் ஜோயா கூறுகையில், 90களின் இறுதியும் 2000களின் தொடக்கமும் இடைப்பட்ட காலத்தில் ஒரு கிராமத்தில் நடக்கும் சம்பவத்தை,அது அங்குள்ள மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பதைக்நகைச்சுவையும் பேண்டஸியும் கலந்து சொல்லப் போகிறோம்” என தெரிவித்துள்ளார்.

