Touring Talkies
100% Cinema

Thursday, June 12, 2025

Touring Talkies

ராம் சரண் தயாரிக்கும் தி இந்தியன் ஹவுஸ் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சிறு விபத்து!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ராம்சரண் முதல்முறையாக தனது தயாரிப்பில் தி இந்தியா ஹவுஸ் என்கிற படத்தை தயாரித்து வருகிறார். கார்த்திகேயா 2 புகழ் நடிகர் நிகில் சித்தார்த்தா நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராம் வம்சி கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார். சுதந்திரப் போராட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி வரலாற்று படமாக உருவாகி வருகிறது.இதற்காக சம்சாபாத் அருகில் மிகப்பெரிய செட் ஒன்று அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது அங்கே மிகப்பெரிய வாட்டர் டேங்க் ஒன்றும் நிறுவப்பட்டிருந்தது. படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென வாட்டர் டேங்க் உடைந்து மிகப்பெரிய அளவில் தண்ணீர் வெள்ளம் போல படப்பிடிப்பு அரங்கை சூழ்ந்தது. இதனால் உதவி ஒளிப்பதிவாளர்கள் சிலர் பெரிய அளவில் காயமடைந்தனர். மேலும் படக்குழுவினர் பலருக்கும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டன. படப்பிடிப்பு உபகரணங்கள் சிலவும் சேதம் அடைந்துள்ளன. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News