இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையும் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்ட ஒரே அரசியுமான வேலு நாச்சியாரின் வரலாறு ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ என்ற பெயரில் படமாக தயாராகி வருகிறது. டிரண்ட்ஸ் சினிமாஸ் சார்பில் ஜெ .எம்.பஷீர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ‘ஊமைவிழிகள்’ படத்தின் இயக்குனர் ஆர். அரவிந்தராஜ் இயக்குகிறார். வேலுநாச்சியாராக ஆயிஷா என்ற புதுமுகம் நடிக்கிறார்.படத்தின் மோஷன் பிக்சர் டீசர் வேலுநாச்சியாரின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு லண்டனில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி வேலு நாச்சியாரின் பிறந்த நாள் அன்று வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more