Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கால்பந்து அணியின் பிண்ணனியில் உருவாக்கும் ‘ட்யூட்’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பனோரமிக் ஸ்டுடியோஸ் சார்பில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் உருவாகும் படம் ‘ட்யூட்’. தேஜ் படத்தை இயக்கியுள்ளதுடன் நாயகனாகவும் நடித்திருக்கிறார். தமிழில் ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘காதலுக்கு மரணமில்லை’, கன்னடத்தில் ‘ரீவைண்ட்’, மற்றும் ‘ராமாச்சாரி 2.O’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தேஜ்.படம் பற்றி தேஜ் கூறியதாவது : கால்பந்து விளையாட்டு பின்னணியில் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக ‘ட்யூட்’ உருவாகி வருகிறது. குறிப்பாக கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமாருக்கு அர்ப்பணிக்கும் விதமாக இந்த படம் தயாராகி வருகிறது. குறிப்பாக பெண்கள் கால்பந்து அணியும் படத்தில் இடம்பெறுகிறது. இதனால் ஏராளமான இளம் பெண்கள் இந்த படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்கள். 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஜூன் அல்லது ஜூலையில் படம் வெளியாகும் என்றார்.

- Advertisement -

Read more

Local News