Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஒரு சிறுவன் என் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டான்… நிவேதா பெத்துராஜ் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாய் உயர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். ‘ஒருநாள் கூத்து’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘டிக்…டிக்…டிக்’ போன்ற பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். தற்போது சென்னையில் வசித்து வரும் இவர், அண்மையில் ஒரு அதிர்ச்சி சம்பவத்தை சந்தித்துள்ளார்.

நிவேதா கூறுகையில், “சென்னை அடையாறு சிக்னலில் ஒரு 8 வயது சிறுவன் என்னை ஏமாற்றினார். முதலில் அந்த சிறுவன் என்னிடம் பணம் கேட்டார். இலவசமாக பணம் தர மறுத்தபோது, புத்தகத்தை ரூ.50க்கு விற்க முயன்றார். நான் ரூ.100 கொடுத்தபோது, அச்சிறுவன் ரூ.500 வாங்குமாறு கேட்டார். புத்தகத்தை திரும்ப கொடுத்து, நான் ரூ.100 மீண்டும் பெற்றபோது, அவன் புத்தகத்தை காருக்குள் வீசிவிட்டு, என் கையில் இருந்த பணத்தைப் பறித்து ஓடிவிட்டான்” என தெரிவித்தார்.

மேலும், தனது சமூக வலைதள பதிவில் நிவேதா, இப்படியாக ஆக்ரோஷமாக பிச்சை கேட்கும் நிலைபாடுகள் எல்லா இடங்களிலும் உள்ளதா? இந்த பிரச்சினையை நீங்கள் சந்தித்துள்ளீர்களா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது, இதையடுத்து, அடையாறு போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News