Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

சினிமா என்பது ஒரு தனி மொழி…அதற்கான உதாரணம் இந்த ‘கல்கி 2898 ஏடி – கமல்ஹாசன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி தற்போது திரைக்கு வந்துள்ள படம் ‘கல்கி 2898 ஏடி’. இந்த படத்தின் சிறப்பு காட்சியை சமீபத்தில் பார்த்துவிட்டு மீடியாக்களை சந்தித்து பேட்டி அளித்த கமல்ஹாசன் கல்கி படத்தை குறித்து சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

அந்த பேட்டியில் அவர், இந்த படத்தை ஒரு ரசிகராக பார்த்து பிரமித்து போனேன். உலக விநோதங்களை நோக்கி இந்திய சினிமா நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளங்களில் இந்த படமும் ஒன்று. நான் அதிகமாக இவ்வாறு ஒரு சுவாரஸ்யமான கதையில் நடித்ததில்லை, ஆனால் இது மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த படத்தை மிகுந்த பொறுமையுடன் செதுக்கி எடுத்திருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் தான் எனக்கான வேலை அதிகமாக உள்ளது,” என்றார்.

இந்தப் படம் பற்றி உலகெங்கிலும் இருந்து நல்ல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இது இந்திய திரைப்படங்களுக்கு வலு சேர்க்கும் ஒரு படமாக இருக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.மேலும் அவர் கூறியதாவது: “மக்களுக்கு புரியாது, மக்களுக்கு தெரியாது என்று சொல்வதையெல்லாம் நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன். வித்தியாசமான, புதுமையான படங்கள் இருந்தால் மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பார்கள். அப்படித்தான் ஜேம்ஸ் பாண்ட் படங்களை பார்த்தார்கள். பாஷை புரியாமல் இருந்தால் கூட நல்ல படைப்புகள் இருந்தால் மக்கள் ரசிப்பார்கள்.

நான் சிறுவனாக இருந்தபோது ‘செம்மீன்’ என்ற ஒரு படம் வந்தது. மொழிமாற்றம் கூட தமிழில் செய்யப்படவில்லை. அந்த படத்தை நான் இரண்டு முறை பார்த்தேன். எதுக்காக பார்த்தேன் என்று கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் எல்லோருமே அந்த படத்தை விரும்பி பார்த்தார்கள். அது கூட அந்த சமயத்தில் 100 நாள் ஓடியது.

அதேபோல் நல்ல படைப்புகள் இருந்தால் மொழிமாற்றமே செய்யப்படவில்லை என்றாலும் மக்கள் அதை ரசிப்பார்கள். அதேபோல் ‘மரோ சரித்ரா’ என்ற படம் டப்பிங் செய்யாமல் தெலுங்கு படமாகவே தமிழகத்தில் ஓடி வெற்றி பெற்றது. நாம் தான் கலைக்கு மொழியை திணிக்கிறோம். சினிமா என்பது ஒரு தனி மொழி. அதற்கான உதாரணம் இந்த ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் தெரிகிறது. கலை என்ற மொழி என்னுடைய பலத்தை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது, என்றார் கமல்ஹாசன்.

- Advertisement -

Read more

Local News