இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த விழாவை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் திறந்து வைத்தார்.

விழாவின் இரண்டாவது நாளான நேற்று, இந்தியாவின் பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்டன. மேலும், அவை தொடர்பான ஆய்வறிக்கைகள், சினிமா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஆய்வு கட்டுரைகள் ஆகியவையும் முன்வைக்கப்பட்டன.
இந்த விழாவில் அமரன் தொடக்க விழா படமாக திரையிடப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர்கள் கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பார்வையாளர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்தனர். அமரன் சர்வதேச போட்டிப் பிரிவில் கோல்டன் பீகாக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

