மாஸ்க் படத்தின் புரோமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் கவின், “மாஸ்க் திரைப்படத்தைப் பார்க்க வரும் கல்லூரி மாணவர்கள் வகுப்பை கட் அடித்துவிட்டு திரையரங்கம் செல்ல வேண்டாம். உங்கள் கல்லூரி கடமைகளை முடித்துவிட்டு சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் நண்பர்களுடன் சென்று பார்க்கலாம். சினிமா என்பது எண்டர்டெயின்மெண்ட். அதனால், அதற்குள் எண்டர் ஆகி உடனே எக்ஸிட் ஆகவும் வேண்டும். அதுதான் நல்லது எனத் தெரிவித்துள்ளார்.


