வாரணாசி டைட்டில் டீசரை வெளியிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவிற்காக ரூ. 25 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் எடுக்கும் பட்ஜெட்டில் இவர்கள் ஒரு விழாவை நடத்தியுள்ளனர் என பலரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.மகேஷ் பாபு – ராஜமௌலி கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார். 2027ஆம் ஆண்டு சம்மருக்கு இப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


