தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட , திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினிகாந்த் படித்தபோது அங்கே நடிப்பு பயிற்சி சொல்லிக் கொடுக்கின்ற வாத்தியராக இருந்த கோபாலி இன்று காலை இயற்கை எய்தினார்.

ரஜினிகாந்த் மீது அவருக்கு அளவில்லாத அன்பு இருந்தது. அதன் காரணமாகத்தான் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் திரைப்பட பயிற்சிக் கல்லூரிக்கு வந்த போது அவரிடம் ரஜினிகாந்தை மிகச் சிறப்பான முறையிலே அறிமுகம் செய்து வைத்தார்.கோபாலி அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் மாறாத அன்பும் வைத்திருப்பவர் ரஜினி.
இந்தியன் எக்ஸ்பிரஸ், தூர்தர்ஷன் ஆகியவற்றில் திறம்பட பணியாற்றிய கோபாலி எண்ணற்ற திரைப்படங்களுக்கு விமர்சனமும் எழுதி இருக்கிறார். நேர்மையான பத்திரிகையாளராக வாழ்ந்து மறைந்த கோபாலி அவர்களுக்கு என்னுடைய இதயபூர்வமான அஞ்சலி
– சித்ரா லட்சுமணன்

