சமீபத்தில் தனுஷ் நடித்த தெலுங்கு ‘குபேரா’ மற்றும் தமிழில் ‘இட்லி கடை’ படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன். இதை அடுத்து அவர் நடித்துள்ள ஹிந்தி திரைப்படமான ‘தேரே இஷ்க் மேயின்’ வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. ஹிந்தியில் தனுஷை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி வரும் ஆனந்த் எல். ராய் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இதில் கிர்த்தி சனோன் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் மும்பையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த படம் முழுவதும் காதல் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷிடம் செய்தியாளர்கள் காதல் என்றால் என்ன? என்று கேள்வி கேட்டனர். அதற்கு முதலில் தனுஷ், எனக்கு தெரியாது என்று பதிலளித்தார். உடனே கூட்டத்தில் இருந்த ஒருவர், நீங்கள் ரொம்ப இளமையாக இருக்கிறீர்கள், அதனால் நீங்கள் காதலைப் பற்றி சொல்லத் தகுதியானவர் தான் என்று அவரை ஊக்கப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து புன்னகையுடன் பதிலளித்த தனுஷ், காதல் என்பது மிகைப்படுத்தப்பட்ட மற்றொரு உணர்ச்சி தான் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். அதற்கு அருகில் இருந்த கிர்த்தி சனோன், ஆனால் படத்தில் தனுஷ் நடித்திருக்கும் கதாபாத்திரம், அவர் சொல்வதற்கு முற்றிலும் மாறுபட்டது” என்று சிரித்தபடி கூறினார். உடனே தனுஷ், இந்தப் படத்தின் ஹீரோ சங்கர் மாதிரி நான் இல்லை அது ஒரு கதாபாத்திரம் மட்டுமே” என்று தெரிவித்தார்.

