ஹரி மகாதேவன் இயக்கத்தில், ‘பிக்பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவி நடித்துள்ள திரைப்படம் ‘யெல்லோ’. இந்தப் படம் மிகவும் வித்தியாசமான முறையில், ‘கொரில்லா மேக்கிங்’ எனப்படும் படப்பிடிப்பு முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் ஒரே வேனில் பயணித்து, பல இடங்களில் திடீரென படப்பிடிப்புகளை மேற்கொண்டுள்ளனர். சில நேரங்களில் பல மணி நேரங்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல முக்கியமான காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளன.

படத்தின் தயாரிப்பாளர் தனது நிறுவனம் வைத்திருந்த லென்ஸ் மற்றும் படப்பிடிப்பு கருவிகளை விற்று, நெருக்கடியான சூழலில் இந்தப் படத்தை முடித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் புதுமுக ஹீரோ நடித்திருந்தாலும், படப்பிடிப்பு சீராக நடைபெற பூர்ணிமா ரவியே முக்கிய பங்காற்றியுள்ளார். அவர் படக்குழுவை ஒருங்கிணைத்து, பல வேலைகளை முன்னெடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
மேலும், இயக்குநர் பிரபு சாலமன் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மறைந்த டில்லி கணேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

