கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தை தி ரூட் மற்றும் தி ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ‘சரஸ்வதி சபதம்’ படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு, இப்படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணியாற்றியுள்ளார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டிலேயே நிறைவடைந்தது. பின்னர் வெளியிடப்பட்ட டீசருடன், படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாவது என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டமிட்ட தேதியில் படம் வெளியாகாமல் தொடர்ந்து தாமதமாகி வந்தது. தற்போது, வரும் 28-ஆம் தேதி ‘ரிவால்வர் ரீட்டா’ படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடித்த ‘ரகு தாத்தா’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. எனவே, இந்த முறை ‘ரிவால்வர் ரீட்டா’ மூலம் வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் கீர்த்தி சுரேஷ் காத்திருக்கிறார்.

