சாரங் தியாகு இயக்கத்தில் கடந்த 7ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ஆரோமலே’ ஆகும். பிரபல நடிகர் தியாகுவின் மகனான சாரங் தியாகு, கவுதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். தற்போது ‘ஆரோமலே’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வெளிவந்ததும் பார்வையாளர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனிடையே, ‘ஆரோமலே’ திரைப்படம் வெளியான இரண்டு நாட்களிலேயே உலகளவில் ரூ.1.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி, இப்படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

