கடந்த 2012ல் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த பிசினஸ்மேன் திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்திற்கு மையக்கருவை ராம்கோபால் வர்மா தான் கொடுத்திருந்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் சாதாரண பிரிண்டாக ஏற்கனவே கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் மகேஷ்பாபுவின் 48வது பிறந்த நாளில் வெளியானது. தற்போது இந்த படம் 4கே தொழில்நுட்பத்தில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது. படம் வெளியான சமயத்தில் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உலக அளவில் 90 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது


