இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய அனுஷ்கா சர்மா, 2017-ல் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார். கடைசியாக அவர் 2018-ல் வெளிவந்த ‘ஜீரோ’ படத்தில் நடித்திருந்தார்.திருமணத்திற்குப் பிறகு, அவர் தனது தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி சில திரைப்படங்களையும் டிவி தொடர்களையும் தயாரித்தார். மேலும், தனது கணவர் விராட் கோலியுடன் இணைந்து சில விளம்பரங்களிலும் நடித்தார்.

மேலும் 2022-ல் அவர் ‘சக்தா எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தில் நடித்தார். இது இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜூலான் கோஸ்வாமியின் வாழ்க்கையை மையப்படுத்திய படம். ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு முடிக்கப்பட்டும் திரைக்கு வராமல் தாமதமடைந்தது.
தற்போது, இந்தப் படத்தை Netflix ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

