நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் ‘தோட்டம்’ படத்தின் தலைப்பு டீசர் அனிமேஷன் வடிவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்து வருகிறது. பான் இந்திய திரைப்படமாக உருவாகும் இதில், நாயகனாக ஆண்டனி வர்கீஸ், நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மலையாள சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷ், இந்த முறை ‘தோட்டம்’ என்ற கதையில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை ரிஷி சிவக்குமார் இயக்குகிறார். இந்த படத்தை ஃபர்ஸ்ட் பேஜ் என்டர்டெயின்மென்ட், ஏவிஏ புரொடக்ஷன்ஸ், மார்கா என்டர்டெயினர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் வெளியான தலைப்பு டீசர் கீர்த்தி சுரேஷின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கீர்த்தி சுரேஷ் தற்போது மிஷ்கின், நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் மற்றொரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். பல படங்களால் தொடர்ந்து பிஸியாக இருப்பதால், ‘தோட்டம்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

