மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்த அவர், தமிழிலும் தன் நடிப்பால் வலுவான இடத்தைப் பிடித்துள்ளார். தமிழில் அவர் நடித்த அசுரன், துணிவு, விடுதலை-2, வேட்டையன் போன்ற படங்கள் அவரது திறமையை நிரூபித்த முக்கியமான படங்களாகும்.

நடிகை மஞ்சு வாரியர் 47 வயதிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக திரையில் பிரகாசித்து வருகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், “இப்போதும் அதே இளமையுடன், அதே உற்சாகத்துடன் திரையில் தோன்றுகிறீர்கள். அதன் ரகசியம் என்ன?” எனக் கேட்கப்பட்டதற்கு அவர், உடற்பயிற்சி மற்றும் நடனமே அதற்குக் காரணம். தினமும் நான் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்கிறேன். அதோடு, சரியான உணவுமுறை மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை என்னை ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கிறது என்று சிரித்தபடி பதிலளித்தார்.மஞ்சு வாரியர் தொடர்ந்து புதிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் அன்பையும் பாராட்டையும் பெற்றுக் கொண்டு வருகிறார்.

