Touring Talkies
100% Cinema

Saturday, November 8, 2025

Touring Talkies

ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? எங்கே நடைப்பெறும்? வெளியான முக்கிய அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘ஜன நாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இப்படமே தான் நடிக்கும் கடைசி திரைப்படம் என விஜய் அறிவித்துள்ள நிலையில் இதற்கு பின் முழுநேர அரசியலில் அவர் ஈடுபட போகிறார்.

மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகிறது. இதற்கிடையே, இப்படத்திற்கான ப்ரேமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, ‘ஜன நாயகன்’ படத்தின் ‘தளபதி கச்சேரி’ எனத் தொடங்கும் பாடல் இன்று மாலை 6.03-க்கு வெளியாகும் என்றும் இப்பாடலை விஜய் பாடியிருப்பதாக கூறப்படுகிறது.

இன்று மாலை வெளியாகும் பாடலை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது, ‘ஜன நாயகன்’ படத்தின் ஆடியோ வெளியீடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 27-ந்தேதி மலேசியாவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து ‘ஜன நாயகன்’ படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி வருவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News