இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் புதிய படம் ‘அரசன்’. வடசென்னையை மையப்படுத்திய கேங்ஸ்டர் கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது.

இதில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரிக்கிறார். சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் கவின் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ‘அரசன்’ படத்தைப் பற்றி பேசியுள்ளார். அதில், அரசன் படத்தைப் பற்றிய அனைத்தும் எனக்குத் தெரியும். இந்த படத்தின் கதை மிகவும் தரமானது. ஆனால் அதை நான் வெளியே சொல்ல மாட்டேன். சிலம்பரசன், வெற்றிமாறன், அனிருத் இந்த மூவரின் காம்போ ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் வகையில் இருக்கும். இவர்கள் மூவரும் இணைந்து ஒரே படத்தில் பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார் கவின்.

