இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘பராசக்தி’. இதில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக தோன்றுகிறார்.

இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம் இதற்கு முன்பு நடந்த ‘இந்தி திணிப்பு’ என்ற சமூக பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
படத்தின் ஷூட்டிங் காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சி போன்ற பல இடங்களில் நடைபெற்றது. இறுதியாக சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்புடன், இப்படத்தின் முழு ஷூட்டிங்கும் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.