இயக்குனர் நலன் குமாரசாமி தற்போது நடிகர் கார்த்தியை வைத்து ‘வா வாத்தியார்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் இவ்வருடம் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

சமீபத்தில் அளித்த பேட்டியி ஒன்றில் நலன் குமாரசாமி கூறியதாவது, நான் இயக்கும் படங்கள் இயல்பாகவே கார்த்தி செய்யக்கூடிய படங்களாக தான் இருக்கும். அவர் தன்னை ஒரு ஹீரோவாக பார்க்காமல் ஒரு டெக்னீஷியன் மாதிரி தான் பார்க்கிறார். அது அவர்கிட்ட வெளிப்படையாக தெரிகிறது.
கார்த்தி, விஜய்சேதுபதி மாதிரி நடிகர்கள் இருப்பதால் தான் நல்ல ஸ்டோரி கொண்ட பெரிய பட்ஜெட்டில் யோசிக்க முடிகிறது. இல்லையெனில் நல்ல ஸ்டோரி என்றால் அது சிறிய படமாகவும் புதுமுகங்களோடேயும் முடிந்து விடும் என அவர் கூறியுள்ளார்.