‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், பின்னர் நடிகராகவும் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த ‘டிராகன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது.
அதற்குப் பிறகு கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள ‘டியூட்’ படத்திலும் பிரதீப் நடித்துள்ளார். மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்த காமெடி கலந்த படம் அக்டோபர் 17ம் தேதி வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் இன்று வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.