தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் கல்யாணி பிரியதர்ஷன். அவர் 2017ஆம் ஆண்டு வெளிவந்த ஹலோ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். பின்னர் 2019ஆம் ஆண்டு தமிழில் ஹீரோ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி வைத்தார். அந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

துல்கர் சல்மான் தயாரிப்பில், டொமினிக் அருண் இயக்கிய லோகா சாப்டர்-1: சந்திரா என்ற மலையாள திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இதில் கல்யாணி பிரியதர்ஷன் ஒரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரத்தம் குடிக்கும் மோகினியாக அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இத்திரைப்படம் இதுவரை ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதால் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. தென்னிந்திய சினிமா வரலாற்றில் ஒரு நடிகையை மையமாகக் கொண்ட எந்தப் படமும் இதற்கு முன்பு ரூ.100 கோடியை கடந்ததில்லை.
அந்த சாதனையை நிகழ்த்திய கல்யாணி பிரியதர்ஷன், “இந்திய அளவில் கவனம் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எது நடந்தாலும், நான் புகழ்ச்சிகளை தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். தொடர்ந்து எனது கடின உழைப்பை சினிமாவுக்காகத் தொடர்ந்து வழங்குவேன்,” என்று கூறினார். தற்போது அவர் ரவி மோகன் இயக்கும் ஜீனி திரைப்படத்திலும், கார்த்தியுடன் இணைந்து மார்ஷல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

