தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக பெயர் பெற்றவர் பாலையா. இவர் இதுவரை தெலுங்கு சினிமாவில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருதை இவரின் நடிப்பில் வெளிவந்த ‘பகவந்த் கேசரி’ படத்திற்கு வழங்கியுள்ளனர். 2021-ம் ஆண்டு, போயபதி சீனு இயக்கத்தில் உருவான ‘அகண்டா’ படத்தில் இவர் நடித்தார். இந்த படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்கு படங்களில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, அதன் 2-ம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிந்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். ஆரம்பத்தில் கடந்த வாரம் இப்படம் வெளியாகும் திட்டம் இருந்தபோதிலும், சில சூழ்நிலைக்காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், பாலையா நடிக்கும் ‘அகண்டா 2’ படம் டிசம்பர் 5-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே நாளில், பிரபாஸ் நடித்துள்ள ‘ராஜா தி சாப்’ படமும் வெளியாக இருப்பதால், ஒரே நாளில் பான் இந்திய படமாக பிரபாஸ் மற்றும் பாலையாவின் படங்கள் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.