ரிஷப் ஷெட்டி இயக்கியும் நடித்தும் வெளியான கன்னட திரைப்படமான ‘காந்தாரா’, கர்நாடகாவில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றியின் பின்னர், ரிஷப் ஷெட்டி மீண்டும் இயக்கியும் நடித்தும் ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தை உருவாக்கியுள்ளார். இதில் நடிகை ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு முடிந்து, தயாரிப்புக் குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும், ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தை 30 நாடுகளில் வெளியிடும் திட்டத்தை படக்குழு வகுத்துள்ளது. அதற்கான டிரெய்லர் வரும் 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.