தமிழில் வி. கிரியேஷன்ஸ் எஸ். தாணு தயாரிப்பில், மிஷ்கின்–விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான டிரெயின் திரைப்படத்தில் ஜெய்ராம், நாசர், டிம்பிள் ஹயாதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் ரிலீஸுக்கு தயாரானது ஓராண்டாகியும், டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் வியாபார ஒப்பந்தங்கள் நிறைவடையாததால் வெளியீடு தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது படக்குழ டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்தப்படத்தை டிசம்பர் மாதத்துக்குள் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது