சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவான மதராஸி படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர் வித்யுத் ஜாம்வால் வில்லனாகவும், ருக்மணி வசந்த் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியான இப்படம் முதல் 3 நாட்களில் உலகளவில் ரூ.65 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
தற்போது, மதராஸி படம் உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.