மலையாள திரைப்படங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை சம்யுக்தா, தொடர்ந்து தெலுங்கில் ‘டெவில்’, ‘பீம்லா நாயக்’, ‘விருபாக்ஷா’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிஸியான நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். பின்னர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘வாத்தி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.

ஆனால், இவர் கடைசியாக நடித்த படம் திரைக்கு வந்து ஒன்றரை வருடங்களை கடந்துவிட்டது. இதனால், தற்போது இவரிடம் பட வாய்ப்புகள் இல்லை என்ற பேச்சுகள் பரவின. எனினும், சம்யுக்தா கைவசம் தற்போது சுமார் 8 படங்கள் உள்ளன என்பது தகவல். தெலுங்கில் ‘அகண்டா 2’, பூரி ஜெகநாத் – விஜய் சேதுபதி படம், ‘நாரி நாரி நாடுமா முராரி’, ‘ஹைந்தவா’, ‘சுயம்பு’, மேலும் ஒரு படத்தில் முதன்மை கதாபாத்திரம் என பல படங்களில் நடிக்கிறார்.
இதற்கு அப்பால், ஹிந்தியில் ‘மஹாராக்னி’ மற்றும் தமிழில் ‘பென்ஸ்’ என உறுதி செய்யப்பட்ட படங்களும் அவரிடம் உள்ளன. கூடுதலாக, இன்னும் சில படங்களுக்கு பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.