தமிழ், மலையாளம் மற்றும் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் மஞ்சு வாரியர். வேட்டையன் படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாகவும், விஜய் சேதுபதியுடன் விடுதலை படத்திலும் நடித்த அவரது கதாபாத்திரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

திருமணத்திற்குப் பிறகு 10 ஆண்டுகள் சினிமாவில் இடைவெளி எடுத்திருந்தாலும், திரும்பி வந்தபோது அவருக்குரிய இடம் மாறாமல் இருந்தது. மலையாள ரசிகர்கள் அவருடைய இடத்தை யாருக்கும் விடாமல் பாதுகாத்தனர்.
தற்போது பல படங்களில் நடித்து வரும் மஞ்சு வாரியர், ஒரு படத்துக்கு சம்பளமாக ரூ.1 கோடி பெறுகிறார். மலையாள சினிமாவில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் முதல் நடிகை இவர்தான் என கூறப்படுகிறது. மேலும், அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.142 கோடி என மணி கண்ட்ரோல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.