இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து உருவாக்கிய ‘மதராஸி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்துக்குப் பிறகு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தில், சிவகார்த்திகேயனுடன் ருக்மணி வசந்த், வித்யுத் ஜாம்வால், பிஜூ மேனன், ‘டான்சிங் ரோஸ்’ சபீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரஜினியின் ‘தர்பார்’ திரைப்படத்திற்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய தமிழ் படம் தற்போது வெளியாகியுள்ளது என்பதால், ‘மதராஸி’ மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்திய அளவில் ‘மதராஸி’ திரைப்படம் முதல் நாளிலேயே ரூ. 13 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் இப்படம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள்களாக இருப்பதால், இந்தப் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.