சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ‘மதராஸி’ திரைப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயனிடம் ‘மதராஸி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பற்றி கேட்டபோது, ரசிகர்கள் தரும் ரெஸ்பான்ஸ் பார்த்தபோது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

நாங்கள் எதிர்பார்த்த இடங்களில் ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் கிடைத்தால் மிக மகிழ்ச்சியாக இருக்கும். தற்போது நான் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படத்தில் நடித்திருக்கிறேன். அதுவும் முருகதாஸ் சார் இயக்கத்தில் நடித்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார் சிவகார்த்திகேயன்.
அதன்பின், விஜய்யின் ‘கோட்’ படத்தின் துப்பாக்கி காட்சியைப் குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், அந்த காட்சி எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த படமும் துப்பாக்கி சார்ந்த படம்தான் என்று தெரிவித்துள்ளார். அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என கேட்டபோது எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மட்டும்தான் என்று பதிலளித்தார்.