ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன்முதலாக நடித்துள்ள படம் ‛மதராஸி’. இப்படத்தில் அவருடன் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜூ மேனன், விக்ராந்த், சபீர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். செப்டம்பர் 5ம் தேதியான நாளை இந்த படம் திரைக்கு வருகிறது. மேலும் கடந்த ஒரு வாரமாக மதராஸி படத்தின் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வந்த நிலையில், இதுவரை நான்கு கோடி வரை முன்பதிவு நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
