அமரன் படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லரும், இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

தற்போது இப்படத்திற்கான பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதனுடன் இணைந்து, சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்திலும் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார்.
இதற்கிடையில் ஆகஸ்ட் 27ஆம் தேதி, சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி தம்பதியரின் 15ஆம் ஆண்டு திருமண நாள் ஆகும். அந்த நாளில் அவர்கள் தங்கள் மகளும், இரு மகன்களும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் நெருங்கியவர்கள் அனைவரும் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.