சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் ‘பராசக்தி’. 1965ஆம் ஆண்டின் ஹிந்தி திணிப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஏற்கனவே இப்படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இந்த நிலையில், 2000களின் தொடக்கத்தில் பிரபல நடிகராக வலம் வந்த அப்பாஸ், ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
11 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பாஸ் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி. பிரகாஷின் தொடர்ந்து தற்போது ‘பராசக்தி’யிலும் இணைந்துள்ளார்.