நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை சிம்ரன் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டியுள்ளார் நடிகை திரிஷா. இந்த படம் மிகச் சிறந்த ஒன்று. அதிலும் சசிகுமார் மற்றும் சிம்ரனின் நடிப்பு பாராட்டத்தக்கவை. என குறிப்பிட்டுள்ளார். தாமதமாக பார்த்தாலும், திரைப்படத்தின் தரம் மிகவும் உயர்ந்ததாகவும், “நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு மட்டுமே நல்லவை நடக்கும்” என்ற வசனம் மிகவும் மனதை தொட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இப்படத்தில் நடித்துள்ள எம். எஸ். பாஸ்கர், குமரவேல், பகவதி, குழந்தை நட்சத்திரம் கமலேஷ் மற்றும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தாவை மனதார பாராட்டியுள்ளார். “நான் சிம்ரனை முதன்முதலில் சந்தித்த நாளிலிருந்து அவரே என் மெய்நிகர் உற்சாகம் (இன்ஸ்பிரேஷன்)” என்றும் தெரிவித்துள்ளார்.
‘மௌனம் பேசியதே’ என்ற திரைப்படம் மூலம் திரிஷா நாயகியாக அறிமுகமானாலும், அவர் சிம்ரனுடன் தோழியாக நடித்த ‘ஜோடி’ திரைப்படத்தில்தான் முதல் முறையாக திரையில் தோன்றியிருந்தார். அந்த நட்பு மற்றும் பாசத்தின் அடிப்படையில் தான், இவ்வாறு சிம்ரனை மனமார பாராட்டியுள்ளார்.