நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயனிடம், உங்கள் படங்களில் எந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசை? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ஒரு படத்தின் தொடர்ச்சியான பாகங்களில் நடிப்பது எனக்கு கொஞ்சம் பயம் தான்.
காரணம், அந்தக் கதையும், இரண்டாம் பாகமும் மிகவும் வலுவானதாக இருக்க வேண்டும். முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தை குறைக்கும் வகையில் இருக்க கூடாது. எனக்கு ‘மாவீரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது. அந்த கதை மிகவும் வலிமையானது. எனவே, அதை முயற்சிக்கலாம் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.