தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அண்மையில் அவர் நடித்த ‘டிராகன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, தற்போது அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி’ என்ற புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அதேபோல், இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கும் ‘டியூட்’ என்ற மற்றொரு படத்திலும் பிரதீப் ரங்கநாதன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக மமிதா பைஜு நடிக்கிறார். இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார். மேலும், முன்னணி நடிகர் சரத் குமார் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த ‘டியூட்’ திரைப்படம் முழுவதும் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் (கேமியோ ரோல்) நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார் என்று தகவல்கள் உலா வருகின்றன. ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.