நடிகர் கவின் நடிக்கும் அவரது 9 வது படத்தை கனா காணும் காலங்கள் தொடரை இயக்கிய கென் ராய்சன் இயக்குகிறார். இதில் கவினுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார்.படத்தின் படப்பிடிப்பு பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் இப்படத்தை பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றை இயக்குனர் கூறியுள்ளார். அதில், நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். வாழ்க்கை கொடுக்கும் வாய்ப்புகளை சரியான வழியில் பயன்படுத்த தவறினால் அதை சரிசெய்ய அதிக காலம் எடுக்கும் என்பதை சொல்லும் கதை.
இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் துவங்கும். காதல் நகைச்சுவை படங்கள் தமிழில் நிறைய வெளிவந்துள்ளன, ஆனால் இது இன்னும் வித்தியாசமாக இருக்கும். கவின்தான் எனது முதல் தேர்வு. கவினும் பிரியங்காவும் ஜோடி சேருவது நன்றாக இருக்கும் என்று நினைத்தேன் என்றுள்ளார்.