நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான ‘தி கோட்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பையும், வசூல் ரீதியில் வெற்றியையும் பெற்றது.

இந்த வெற்றிக்குப் பிறகு, வெங்கட் பிரபு இயக்கும் அவரது அடுத்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரவிருக்கும் நவம்பர் மாதத்தில் துவங்க உள்ளன என கூறப்படுகிறது. இது ஒரு SCI-FI வகையில் மையமாகக் கொண்டு உருவாகும் படம் என்றும், வெங்கட் பிரபுவுக்கே உரித்தான நகைச்சுவை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அனிருத் இசையமைத்துள்ள சிவகார்த்திகேயனின் பல திரைப்படங்கள் வெற்றிபெற்றுள்ளன. இதனால், இந்த கூட்டணிக்கும் பெரும் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.