ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘பாகுபலி’ (முதல் பாகம்) திரைப்படம், இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. அந்த படம் வெளியான சமயம், ‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?’ என்ற கேள்வி பெரியளவில் டிரெண்ட் ஆனது. சினிமா பாடல்களில் கூட அந்த வரிகள் இடம்பெற்றன.’பாகுபலி’ படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை படக்குழுவினர் கொண்டாடி வருகிறார்கள். இதற்கிடையில் ‘பாகுபலி’ படத்தின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில், ‘ஒருவேளை கட்டப்பா பாகுபலியைக் கொலை செய்யவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்?’ என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‘நான் கொன்று இருப்பேன்’ என ராணா குறிப்பிட்டார். ராணாவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
